Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு பாலியல் தொல்லை - தடுக்க சென்ற தாய் மீதும் தாக்குதல்

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (12:44 IST)
உத்திரபிரதேசத்தில் 16 வயது சிறுமியை 3 மனித மிருகங்கள் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்குநாள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனாலும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறைந்தபாடில்லை.
 
இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், வெளியில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த 3 மனித மிருகங்கள் சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை செய்துள்ளனர்.
 
இதனையறிந்த சிறுமியின் தாய் பதற்றமடைந்து, சம்பவ இடத்திற்கு சென்று, அந்த இளைஞர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிறுமியின் தாயை சரமாரியாக தாக்கியுள்ளனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீஸார் அந்த 3 மனித மிருகங்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்