சாராய கடையை அடித்து உடைத்த பெண்கள்: நாகை மாவட்டத்தில் பரபரப்பு
சாராயக் கடையை அகற்ற வேண்டும் என பெண்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் இன்று பெண்கள் களத்தில் இறங்கி சாராயக்கடையை அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் ஆதமங்கலம் கீழகண்ணாப்பூர் என்ற பகுதியில் குடியிருப்பு பகுதியில் சாராயக்கடை செயல்பட்டதை அடுத்து அந்த பகுதி பெண்கள் பெண்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த பெண்கள் இன்று வெகுண்டெழுந்து கீழகண்ணாப்பூர் பகுதியில் உள்ள சாராயக்கடையை அடித்து உடைத்தனர். இதனையடுத்து சாராயக்கடையை நடத்தியவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.