கடந்த ஆண்டில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட மகளிர் இலவச பயண திட்டத்தில் 131 கோடிக்கும் அதிகமான முறை பெண்கள் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு திமுக ஆட்சியமைத்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ளூர், நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த இலவச பயண திட்டம் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தற்போது போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் இலவச பயணத்திட்டத்தின் கீழ் இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். நாள்தோறும் சராசரியாக 37.4 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர். தினசரி பேருந்துகளில் பயணிப்பவர்களில் 62.34% பெண்கள் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.