Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் அமைச்சர் வருகையால் பொதுமக்கள் பாதிப்பா?

Advertiesment
senthilbalaji
, வெள்ளி, 24 ஜூன் 2022 (23:07 IST)
நிகழ்ச்சிகாக பயனாளிகளை சுமார் 5 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள் – நேற்று நடைபெறும் திட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டு இன்று நடத்தப்பட்ட நிலையிலும், காலை 9 மணிக்கு என்று கூறி 8 மணிக்கே ஏற்பாடுகளை செய்திருந்தும் 12.30 மணிக்கு வந்த அமைச்சர் செந்தில்பாலாஜியால் கர்ப்பிணி பெண்கள் அவதி.
 
கரூர் நகர ஆரம்ப சுகாதாரநிலையமான கஸ்தூரிபாய் தாய் சேய் நல மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி தொடங்கி வைக்கும் திட்டம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். இந்த திட்டம், நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற இருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பிலும், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்டும், ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

நேற்று மதியம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு, திடீரென்று மதியம் 3.41 மணிக்கு நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது என்றும் இது குறித்த தகவல் மீண்டும் அறிவிக்கப்படும் என்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவித்திருந்தது. பின்னர்., அதே செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாளை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்று நேற்று இரவு 8.49 மணிக்கு அறிவிக்கப்பட்டது. முதலில் கர்ப்பிணி பெண்கள் திட்ட்த்தினை முடித்து கொண்டு பின்னர் மற்ற நிகழ்ச்சிகளை வைத்து கொள்ளலாம் என்று நினைத்த மாவட்ட நிர்வாகம், இன்று காலை 9 மணிக்கு முதல்நிகழ்ச்சியாக கரூர் கஸ்தூரி பாய் தாய் சேய் நல மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் திட்டத்தினை அறிவித்தது. இதற்காக பயனாளிகளை முன் கூட்டியே சுமார் 8 மணிக்கே மருத்துவமனை வளாகத்திற்கு வந்த கர்ப்பிணி பெண்கள் ஒரு சிலர் உணவு உண்ணாமல் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்., காலை 8.45 மணியளவில் திடீரென்று நிர்வாக காரணமாக காலை 9 மணிக்கு பதில் 10.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டமும் அறிவித்தது. பின்னர் 10.30 மணிக்கு வர வேண்டிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மதியம் 12.30 மணிக்கு வந்திருந்தார். காலையில் நடக்க வேண்டிய நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது 8 மணியிலிருந்தே காத்து கொண்டிருந்த கர்ப்பிணி தாய்மார்கள், சுமார் 4.30 மணி நேரமாக காத்திருந்து 50 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைகளால் ஊட்டச்சத்து பொக்கிஷம் பெட்டகம் என்கின்ற தலைப்பில் 10 பொருட்களை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு வழங்கினார். 10 பொருட்களை 50 நபர்களுக்கு அதுவும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்க, நேற்று மாலை முதலே, நிர்வாக காரணம் என்று காட்டி, அந்த தாய்மார்களை அழைக்கழித்ததோடு, இன்று காலை 8 மணி முதல் அதே நிர்வாகம் காரணம் காட்டி, மதியம் 12.30 மணியளவு வரை அதே நிர்வாகம் காரணம் காட்டி காக்க வைத்த மாவட்ட நிர்வாகமும், இந்த பொக்கிஷம் என்கின்ற பெட்டகத்தினை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரும் யாரும் இந்த நிர்வாக காரணமாக ஏற்பட்ட கால தாமதத்திற்கு மன்னிப்பு கூட கேட்கவில்லை என்பது நிர்வாகத்தின் அலட்சியம் என்கின்றனர் நடுநிலையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: கன மழையால் மோசமாகி வரும் மீட்பு நடவடிக்கைகள்