Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

Advertiesment
Murder

Mahendran

, செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (12:17 IST)
வாழப்பாடியில், வசந்தி என்ற பெண் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் அவரது கணவர் பொன்னுவேல் மற்றும் இரண்டு மகன்களும் சேர்ந்து அவரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசந்தி அடிக்கடி செல்போனில் பேசுவதை அவரது கணவர் மற்றும் மகன்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர்கள் மூவரும் சேர்ந்து வசந்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த வசந்தி மயக்கமடைந்த நிலையில், அவரை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து, போலீசார் பொன்னுவேல் மற்றும் அவரது இரு மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வசந்தி யாரிடமோ அடிக்கடி செல்போனில் பேசியதை தவறாக நினைத்து இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு சின்ன பிரச்சனைக்காக ஒரு குடும்பமே நிலைகுலைந்து உள்ளதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!