நேற்று ஆந்திரமாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் அம்மாநில போலீஸாரால் சந்தேகத்தின் அடைப்படையில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளரான முகிலனை , அவரது நண்பர் ஒருவர் பார்த்ததாகக் கூறியதை அடுத்து தமிழக ஊடகங்களில் செய்திகள் தீயாகப் பரவியது. இதனையடுத்து தமிழக சிபிசிசிடி போலீஸார் ஆந்திராவுக்குச் சென்று நேற்று இரவோடு இராவாக காட்பாடி வழியாக சென்னைக்கு முகிலனை அழைத்துவந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து முகிலனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் 140 நாட்களுக்குப் பிறகு முகிலனின் மனைவி அவரைச் சந்தித்தார். இந்நிலையி தற்போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஏமாற்றுதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் சிபிசிஐடி போலீஸார் ஆட்கொணர்வு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் முகிலனை, ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிகிறது.
பாலியல் வழக்கிலும் முகிலனை ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்ரு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.