Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயாகரா சாப்பிட்டு செக்ஸ் தொல்லை - கூலிப்படை வைத்து கணவனை கொன்ற இளம்பெண்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (11:06 IST)
வயாகரா போன்ற மாத்திரைகளை சாப்பிட்டு தொடர்ந்து தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால், விரக்தியடைந்த இளம் மனைவி கூலிப்படை மூலம் கணவனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.


 

 
சேலம் மாவட்டதை சேர்ந்தவர் கவியரசு(42). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவர் மனைவியை பிரிந்தார். அதன் பின் தர்மபுரியில் வசித்து வந்தார். அப்போது, நிர்மலா(23) என்ற இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவரை 2வதாக கவியரசு திருமணம் செய்டு கொண்டார்.
 
அதன் பின் வயாகரா போன்ற அதிக சக்தி கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டு, நிர்மலாவிற்கு தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பலமுறை நிர்மலா எடுத்துக்கூறியும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. எனவே, இதுபற்றி தனது முன்னாள் காதலன் அபினேஷ்(27) என்பவரிடம் நிர்மலா அழுது புலம்பியுள்ளார்.
 
மேலும், கவியரசுவை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுமாறு கூறிய அவர், அதற்காக ரூ.52 ஆயிரம் பணத்தையும் கொடுத்துள்ளார். எனவே, கூலிப்படை அமைத்த அபினேஷ் இரு வாரங்களுக்கு  முன்பு கவியரசுவை கொலை செய்து தர்மபுரி அருகே குண்டலப்பட்டி-மல்லிக்குட்டை செல்லும் சாலையோரத்தில் குழிதோண்டி உடலை புதைத்துவிட்டார்.
 
அந்நிலையில், மகனை காணவில்லை என கவியரசுவின் தாய் போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் கவியரசுவின் செல்போன் நிர்மலாவிடம் இருப்பது, அதில் இருந்து அவர் அபினேஷூடன் தொடர்ந்து பேசி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, நிர்மலா மற்றும் அபினேஷுடன் போலீசார் விசாரணை செய்தனர். இதில் இருவரும் முன்னுக்குப்பின் பதில் அளித்ததால், சந்தேகமடைண்ட்த போலீசார் அபினேஷூடன் தனியாக விசாரணை செய்தனர்.
 
அதில் அவர் கூலிப்படையை ஏவி கவியரசுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் மேலும், புதைக்கப்பட்ட கவியரசுவின் உடலை தோண்டி எடுத்த போலீசார், பிரேத பரிசோதனை செய்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்