ஒருதலைக் காதல் ; இளம்பெண் எரித்துக்கொலை ; சென்னையில் அதிர்ச்சி

செவ்வாய், 14 நவம்பர் 2017 (10:06 IST)
ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலணியில் வசிக்கும் பள்ளி மாணவி இந்துஜாவிற்கு, அவரின் நண்பர் ஆகாஷ் என்ற மாணவர் கடந்த சில மாதங்களாக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலை இந்துஜா நிராகரித்துவிட்டதாக தெரிகிறது.
 
இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ் நேற்று இரவு 8.40 மணியளவில், இந்துஜாவின் வீட்டிற்கு பெட்ரோலை எடுத்து வந்து அவரின் மீது ஊற்றி தீ வைத்தார். இதுக்கண்டு அதிர்ச்சியடைந்த இந்துஜாவின் தாய் மற்றும் சகோதரி இந்துஜாவை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களும் தீக்காயம் அடைந்தனர். இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய ஆகாஷ் அங்கிருந்து ஓடிவிட்டார்.
 
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இந்துஜா மரணமடைந்தார். அவரின் தாய் மற்றும் சகோதரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாகிவிட்ட ஆகாஷையும் அவர்கள் தேடி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் வேளச்சேரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நடிகர் கருணாஸ் குடிபோதையில் தகராறு!