Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டில் ஒன்று தான்.. வேறு ஆப்ஷன் இல்லை.. கமலுக்கு கறார் நிபந்தனை விதித்த திமுக..!

Siva
திங்கள், 11 மார்ச் 2024 (09:10 IST)
திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் வேண்டும் என்று கேட்கப்பட்ட நிலையில் கடைசியில் ஒரு தொகுதி கொடுங்கள் கோவை அல்லது தென்சென்னை கொடுங்கள் என்று கேட்கப்பட்டதாகவும் கோவை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக கூறிய திமுக தென்சென்னை திமுகவின் கோட்டை என்பதால் அதை கொடுக்க வாய்ப்பே இல்லை என்று பதில் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து  ஒரு தொகுதிக்கு ஒப்புக்கொண்ட திமுக அந்த ஒரு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது.

இதற்கு கமல்ஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஒரு கட்சியின் தலைவரே இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் நாங்கள் எதற்காக கட்சி நடத்த வேண்டும் என்று கூறியதாகவும் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று உறுதியுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது .

இதனை அடுத்து திமுக இறுதியாக ஒரு தொகுதி அதுவும் உதயசூரியன் சின்னம் அல்லது மாநிலங்களவை தொகுதி இரண்டில் ஏதாவது ஒன்றை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் வேறு ஆப்ஷன் உங்களுக்கு இல்லை என்று கூறியதை அடுத்து வேறு வழியில்லாமல் தான் கமல்ஹாசன் மாநிலங்களவை தொகுதி என்பதை தேர்வு செய்ததாகவும் மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள் கூறுகின்றன  

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments