Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக சொன்னதையே சொல்லும் காங்கிரஸ்.. அதிருப்தியின் உச்சத்தில் கமல்..!

mks kamal

Mahendran

, வெள்ளி, 8 மார்ச் 2024 (11:05 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இடம்பெறும் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரண்டு கட்ட பேச்சு வார்த்தையில் ஒரு தொகுதி மட்டும் கமலஹாசன் கட்சிக்கு கொடுக்கப்படும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது

இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் உள் ஒதுக்கிட்டில் ஒரு தொகுதி பெற்று அதில் போட்டியிடலாம் என்று கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியும் கை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

திமுக சொன்னதையே காங்கிரஸ் கட்சியும் கூறி இருப்பதை அடுத்து அதிருப்தியின் உச்சத்துக்கு சென்ற கமல்ஹாசன் தனித்து போட்டியிடலாமா என்று ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை தனித்து போட்டியிடுவதாக இருந்தால் கோவை அல்லது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசனுக்கு விருப்பம் இருந்தாலும் தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் இருப்பதால் அந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அவருடைய ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். இதில் கமல் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குமரியில் 12 சிவாலயங்களில் மகாசிவராத்திரி உற்சவம்! கடலென திரண்ட பக்தர்கள்! – பேருந்து, ஆட்டோ கிடைக்காமல் அவதி!