கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்? ஜாதியை ஒழிக்கவா? சீமான் கேள்வி..!

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (15:34 IST)
தமிழகத்தில் எத்தனையோ தொகுதிகள் இருக்கும்போது தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட வேண்டிய அவசியம் என்? ஜாதியை ஒழிக்கவா? அல்லது ஏமாந்த மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள் என்பது தான் காரணமா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் சீமான் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது கனிமொழி தூத்துக்குடியை தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்வி எழுப்பினார். தூத்துக்குடியில் தான் ஏமாந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு தானே கனிமொழி தூத்துக்குடியை தேர்வு செய்தார்? என்றும் அவர் கூறினார்

மேலும் பெரியாரை அண்ணா, கருணாநிதியை விட யாரும் விமர்சனம் செய்ததில்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை, சாலைகளில் திமுக கொடி கட்டிய காரில் சென்று பெண்களை தொந்தரவு செய்கிறார்கள், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்கள், ஆனால் இன்றும் நீதி நிலைநாட்டப்படவில்லை, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் எடுத்த நடவடிக்கை என்ன? கொடநாடு கொலையில் எடுத்த நடவடிக்கை என்ன? ஐந்து பேர் உயிரிழந்ததற்கு காரணம் என்ன? கொலை செய்தது யார் என்று அடுக்கடுக்காக சீமான் கேள்வி எழுப்பினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்