Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள்: சீமான்

Advertiesment
Seeman

Mahendran

, செவ்வாய், 28 ஜனவரி 2025 (10:57 IST)
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் ’திராவிடர்களுக்கு ஒரே ஒரு பெரியார் தான் என்றும் ஆனால் தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள் இருக்கிறார்கள் என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசி வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில் சீமான் குறித்த பல  உண்மைகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன. குறிப்பாக அவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்றும், விடுதலைப்புலிகளிடம் பயிற்சி பெற்றது உண்மை இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான் ’திராவிடர்களுக்கு ஒரே ஒரு பெரியார் தான் என்றும் ஆனால் தமிழர்களுக்கு ஓராயிரம்  பெரியார்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். ஈரோடு கிழக்கில் எங்களுக்கு வாக்களித்து நம்பிக்கையோடு ஒரு அடி எடுத்து வையுங்கள், மாபெரும் அரசியல் புரட்சிக்கான காலடித்தடம் ஈரோடு கிழக்கிலிருந்து தொடங்கப்படும் இந்த வெற்றி தமிழ் தேசிய இனத்தின் வெற்றியாக கருதி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.

மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை என்றும் சொத்துவரி, மின்கட்டண உயர்வு பற்றி திமுக தேர்தல் அறிக்கை சொல்லவில்லை, மேலும் சாராய விற்பனையை தவிர திமுக அரசுக்கு வருவாய் தரும் மாற்று திட்டம் இல்லை என்றும் அவர் கடுமையாக திமுக அரசை விமர்சனம் செய்தார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகள் பட்டியல்.. முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஒரே ஒரு வங்கி..!