டிவி, பிரியாணி அரிசி, எல்.சி.டி : புழல்சிறையில் என்ன நடக்கிறது?
, வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (15:35 IST)
டிவி, பிரியாணி அரிசி, எல்.சி.டி : புழல்சிறையில் என்ன நடக்கிறது?
கடந்த சில நாட்களுக்கு முன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் சொகுசாக வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானதையடுத்து, சென்னை புழல் மத்திய சிறையில் நேற்றிரவு டிஐஜி முருகேசன் தலைமையிலான போலீஸார் ஐந்தாவது முறையாக சோதனை செய்தபோது அங்கு உயர்ரக டிவி,அரிசி ,கட்டில் போன்றவை சிக்கியுள்ளது.
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, குற்றவழக்குகளில் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு அவர்கள் செய்த குற்றத்துக்கு தன்னை மனதளவில் திருத்திக் கொள்வதற்காகத்தான் சிறையில் அடைக்கப்படுவது.
ஆனால் இதற்கு மாறாக சில வசதியான கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு,ஜெயிலுக்கு வந்த தண்டனை காலத்தில் விருந்தினர் போல ராஜ உபச்சாரம் பெற்று வருகின்றனர் என்பது தற்போது அந்த புகைப்படங்களின் மூலம் உறுதிசெய்ய முடிகிறது.
இதற்கு சிறைத்துறையில் உள்ள சில போலீஸாரின் அனுமதியில்லாமல் அந்த கைதிகள் இப்படிபட்ட சொகுசு வாழ்க்கையை வாழ்வது சாத்தியமில்லை.
ஆனால் அரசு சம்பளத்தை பெற்றுக்கொண்டு குற்றவாளிகளின் ஏவுதலுக்கு எப்படி குறிப்பிட்ட காவல்துறையினர் சம்மதித்தனர் என்பதுதான் மக்களின் தார்மீக கேள்விக் குறியாகவுள்ளது.
இப்படி கொலை,கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பந்தாவாக பணத்தை அள்ளி வீசி தாங்கள் நினைத்தது போல் வாழ்க்கை வாழ்வதற்கு அது ஹோட்டலும் அல்ல ;மார்பிளக்க வியர்வை சிந்தி உயிரைக் கொடுத்து கட்டிய வீடும் அல்ல. செய்த தவற்றை உணர்ந்து திருந்துவதற்காக நாட்டின் நான்கு தூண்களில் ஒரு தூணான நீதிதுறையின் வாயிலாக அரசியல் சாசனப்படி விதிக்கப்பட்ட சட்டமுறையாகும்.
எனவே இந்த சட்டத்தைமீறி குற்றவாளிகளுக்கு அடக்கலம் தருவது போல தண்டனை அனுபவிக்க வந்த கதிகளுக்கு சிறையில் பணத்தை பெற்றுக் கொண்டு குற்றவாளிகளுக்கு சொகுசு வாழ்க்கை வாழ அனுமதி அளித்த குறிப்பிட்ட காவல்துறையினரையும், இந்த சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கைதிகளுகளையும் முறைப்படி விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும் என்பதே சாமன்ய மக்களின் வேண்டுகோளாகும்.
இந்நிலையில் நேற்றிரவு டிஐஜி முருகேசன் தலைமையிலான போலீஸார் ஐந்தாவது முறையாக புழல் சிறையில் சோதனையிட்ட போது சமையலறை, கைதிகளின் அறை போன்றவற்றில் எல்.சி.டி.டிவி,பொன்னி அரிசி, பாசுமதி அரிசி, எண்ணெய் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சட்டத்தை காவலரே மதிக்க வில்லை எனில் ...அவர்களிடம் குற்றவாளிகளாக இருப்போரும் மதிப்பார்களா என்பது சந்தேகமே!
இதுகுறித்து உயர் அதிகார்கள் உரிய விசாரணை நடத்தி குற்றத்திற்கு யாரெல்லாம் காரணமோ அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் கூட.
அடுத்த கட்டுரையில்