Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரபேல் ஊழல் ரூ.1,30,000 கோடி: யார் அந்த 2 முக்கிய குற்றவாளிகள்?

Advertiesment
ரபேல் ஊழல் ரூ.1,30,000 கோடி: யார் அந்த 2 முக்கிய குற்றவாளிகள்?
, செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (16:28 IST)
ரபேல் விவகாரத்தில் ரூ.1,30,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும், இதற்கு முக்கிய இரண்டு குற்றவாளிகள் மோடியும், நிர்மலா சீதாராமனும்தான் என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. 
 
ரபேல் ஊழல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ரபேல் மோசடியில் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதை பிரான்ஸ் முன்னாள் அதிபர் அம்பலப்படுத்தி விட்டார். மேலும் ரபேல் விமான பேரத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானிக்கு தருமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டதால்தான் அந்த ஒப்பந்தம் ரிலையன்ஸுக்குப் போனதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதாவது, பாஜக அரசு மூலம் ரபேல் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.351 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. 
 
மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்தம் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதாவது பாஜக வேண்டுமென்று அதிக விலைக்கு விமானங்களை வாங்கியுள்ளது.
 
மொத்தமாக இந்த ஒப்பந்தம் மூலம் 1,30,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான் என்றும், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. 
 
இந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது நிர்மலா சீதாராமன். எனவே, மோடி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு இந்த ஊழலில் நேரடி தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்பிற்கு மூக்கு உடைப்பு; ஈரானுடன் வர்த்தகம்: அதிரடி காட்டும் உலக நாடுகள்!