Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குண்டர் சட்டம் ரத்தாகுமா? – சிறுமி பலாத்கார வழக்கில் புதிய மனு

குண்டர் சட்டம் ரத்தாகுமா? – சிறுமி பலாத்கார வழக்கில் புதிய மனு
, புதன், 26 செப்டம்பர் 2018 (16:38 IST)
சென்னை அயனாவரம் சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை நீக்கக்கோரி உறவினர்கள் நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்தனர்.



கடந்த ஜூலை மாதம் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அவர்களை வழக்குரைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து அவர்கள் பதினேழு பேரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்து தற்போது அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கினை மாநிலக் காவல்துறை அவசர அவசரமாக விசாரிப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 பேரின் உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர், இந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிபதிகள் காவல் ஆணையர், சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோரிடம் இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் வேண்டாம் சரி, அப்போ இதுவர லிங்க் பண்ணத என்ன பண்றது?