தற்போது சமூக வலைதளங்களில் மிக பெரிய ட்ரெண்டிங்கில் போய் கொண்டிருப்பது காண்ட்ராக்டர் நேசமணி தலையில் சுத்தியல் விழுந்து அவர் சிகிச்சைக்காக ICUவில் வைக்கப்பட்டிருப்பதுதான்.
2001ஆம் ஆண்டு விஜய்,சூர்யா ஒரே ஒரு தடவை சேர்ந்து நடிச்ச படம்தான் ஃப்ரெண்ட்ஸ். அதுல ஹீரோக்களா நடிச்ச விஜய், சூர்யாவோட கேரக்டர் பேரு கூட தமிழர்கள் நினைவில் இருக்காது. ஆனா காண்ட்ராக்டர் நேசமணி, அவருடைய அண்ணன் மகன் கிச்சின மூர்த்தி, அவரோட வேலைக்காரன் கோவாலு, இவர்களை பற்றி பேசாத ஆளுங்களே தமிழ்நாட்டில் கிடையாது.
Pray for Nesamani இப்படித்தான் ஆரம்பிச்சது. பாகிஸ்தானை மையமாக கொண்ட Engineering படிப்பவர்களுக்கான விவாதங்களை செய்யும் ஃபேஸ்புக் பக்கம் அது. அதில் சுத்தியல் ஒன்றின் படத்தை போட்டு “இதை உங்க ஊர்ல என்ன பெயர் சொல்லுவாங்க?”னு கேட்க, யாரோ ஒரு மரண வடிவேலு ரசிகன் “இதை எங்க ஊர்ல சுத்தியல்னு சொல்லுவாங்க. இதை அடிச்சா ‘டங் டங்’னு சத்தம் வரும். காண்ட்ராக்டர் நேசமணி தலையில அவரோட அண்ணன் பையனே சுத்தியலை போட்டுட்டாரு.பாவம்”னு கமெண்ட் பண்ணியிருக்கார். அதை பார்த்த இன்னொரு தமிழ் ஆளு ஒன்னுமே தெரியாத மாதிரி “இப்ப அவருக்கு பரவாயில்லையா?”னு கேட்க, “இப்ப அவர் சரி ஆயிட்டார். அவரோட ஆட்கள் அவர் முகத்துல தண்ணி ஊத்தி அவரை காப்பாத்திடாங்க”னு மறுபடி கமெண்ட் வந்திருக்கிறது. இப்படியே இங்க இருக்கிற நம்மாட்கள் எல்லாம் அந்த பாகிஸ்தான் பக்கத்துல உக்காந்துகிட்டு நேசமணி புகழ் பாடுனதோட இல்லாம, அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எல்லா பக்கமும் ஷேர் பண்ணிவிட்டுட்டாங்க.
இதை டிவிட்டர்ல பாத்த வெளிமாநில பசங்க சில பேர் நேசமணி யாரோ ரொம்ப பெரிய ஆளு போல இருக்குனு அவங்களும் Pray for Nesamani னு ட்வீட் போட சோசியல் மீடியா முழுசும் ஒரே நாள்ல நேசமணி பிரபலம் ஆகிட்டார். போதாத குறைக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நேசமணி ட்வீட் ஒன்று போட்டுவிட்டு தன் பங்கை ஆற்றியிருக்கிறார். இதை பார்த்த மற்ற நாட்டவர்கள் யார் அந்த நேசமணி என்று இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அந்த பாகிஸ்தான் ஃபேஸ்புக் பக்கத்தில் நிறைய தமிழ் ஆட்கள் புகுந்து கொண்டு எல்லா போஸ்ட்டுகளிலும் வடிவேலு கதாப்பாத்திரங்களை தொடர்பு படுத்தி கமெண்டுகளாக போட்டு வருவதாக தகவல்.