Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா வந்தபின்னர் தான் பொதுக்குழு: ஈபிஎஸ் உறுதியால் அதிர்ச்சியில் ஓபிஎஸ்

சசிகலா வந்தபின்னர் தான் பொதுக்குழு: ஈபிஎஸ் உறுதியால் அதிர்ச்சியில் ஓபிஎஸ்
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (22:07 IST)
அதிமுகவுக்கு சிம்மசொப்பனமாக டிடிவி தினகரன் இருப்பார் என்று கருதப்பட்ட நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கும் அவரது கட்சிக்கும் உள்ள மதிப்பு எவ்வளவு என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்துவிட்டது. இதனை அடுத்து அதிமுகவில் அமமுக விரைவில் இணைந்து விடும் என்றே கருதப்பட்டது. 
 
 
இந்த நிலையில் சசிகலா அடுத்த ஆண்டு மத்தியில் நன்னடத்தைக் காரணமாக முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு இருப்பதாகவும், அவர் வெளியே வந்தவுடன் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் பதவி ஏற்பார் என்றும், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வார் என்றும் இதற்கான ரகசிய பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் டிடிவி தினகரனை தேசிய அரசியலுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது
 
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவது சந்தேகமே என கூறப்படுகிறது. பொதுக்கூட்டம் நடத்தப்படும் தேதி குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஈபிஎஸ் முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், வேண்டும் என்றே இப்பொதுக்குழு தள்ளிப்போட வேண்டும் என்று ஈபிஎஸ் திட்டமிடுவதை அறிந்து ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனப் புரட்சியின் 70வது ஆண்டு விழா: விமானம் பறக்கத் தடை, கோலாகலக் கொண்டாட்டம்