Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் மாவட்டத்தினை தமிழக அளவில் பசுமையாக்க புதிய வியூகம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அசத்தல்

Advertiesment
கரூர் மாவட்டத்தினை தமிழக அளவில் பசுமையாக்க புதிய வியூகம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அசத்தல்
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (21:36 IST)
புதிய நவீன மின்சார பேருந்தில் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யலாம் என்று பேருந்தினை ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி மேலும்., கானகத்தில் கரூர் என்ற புரட்சியில் களமிறங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தினை தமிழக அளவில் பசுமையாக்க புதிய வியூகம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அசத்தல்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு கானகத்தில் கரூர் என்கின்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். கரூர் மாவட்ட அவைத்தலைவரும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன், கரூர் மத்திய நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் வடக்குநகர செயலாளர் பாண்டியன், கரூர் தெற்கு நகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோயிலை சுற்றி மரக்கன்றுகளை நட்டு முழுவதும் இயற்கை பசுமையோடு இருக்கும் விதமாகவும், ஆலயத்தில் பசுபதீஸ்வரரை தரிசிப்பவர்கள், இயற்கையோடு தரிசிக்க வேண்டுமென்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேட்டியின் போது., அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் மின்சார பேருந்தை சென்னையில் தொடங்கி வைத்தார் அது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது அந்தப் பேருந்து ஒருமுறை சார்ஜ் செய்தால் நாற்பது கிலோமீட்டர் தூரம் செல்லும் ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நவீன மின்சார பேருந்தில் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யலாம் வேலூர் முதல் சென்னை வரை உள்ள பேருந்து திருவண்ணாமலை முதல் சென்னை வரை இரண்டு பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது பொதுமக்கள் இந்த பேருந்துகளை 100% பேர் பயணிக்கின்றனர் கும்பகோணம் பேருந்து கோட்டத்தில் 10 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளது இதில் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது பொதுமக்களிடம் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்துகள் நூறு சதவீதம் அளவு பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர் தனியார் பேருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து அரசு பேருந்துகளை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் தற்போது மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரசுப்பேருந்து அதிக அளவு பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். நடைபெறும் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மகத்தான முறையில் அதிமுக வெற்றி பெறும் என்றார்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெங்கு இல்லை ..வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ரெடி - மருத்துவக்கல்லூரி முதல்வர்