Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு ? ஹர்பஜன் சிங் 'ஆங்கிரி' டுவீட் !

Advertiesment
100 அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு ? ஹர்பஜன் சிங் 'ஆங்கிரி' டுவீட் !
, ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (14:49 IST)
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியச் சேர்ந்த குழந்தை சுர்ஜித் நேற்று முன்தினம் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  அன்று முதல்  தமிழக அரசு, தன்னார்வலர்கள் மீட்புக்குழுவினர், தீயணைப்புப்படையினர் என பல்வேறு தரப்பினர் குழந்தை மீட்கும் பணியில் ஈட்டுட்டுள்ளனர். இதற்கு, கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்  ஹர்பஜன் சிங் , ''நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு ''என கேள்வி கேட்டு ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு  பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே என தெரிவித்துள்ளார்.
 
ஹர்பஜனின் இந்த கேள்வி ஞாயமானது தான் என பலரும் இந்தப் பதிவிற்கு லைக்குகள் போட்டு வருகின்றனர்.
 
இதற்கு முன்னதாக, கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்  ஹர்பஜன் சிங்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது :
 
நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மிகப் பெரிய விஷயம் ’நடந்துவிட்டது - அமெரிக்க அதிபர் டிரம்ப் ’டுவீட்’