Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபார்முலா-4 கார் பந்தயத்தை இந்த தேதியில் இலவசமாக பார்க்கலாம்.! அமைச்சர் உதயநிதி தகவல்.!!

Advertiesment
ஃபார்முலா-4 கார் பந்தயத்தை இந்த தேதியில் இலவசமாக பார்க்கலாம்.! அமைச்சர் உதயநிதி தகவல்.!!

Senthil Velan

, சனி, 24 ஆகஸ்ட் 2024 (13:28 IST)
ஆகஸ்ட் 31-ம் தேதி காலை மட்டும் ஃபார்முலா-4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக 3 ஆண்டுகளுக்கு ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

சென்னையில் மழை தீவிரம் அடையும் முன்பாகவே வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தயம் அண்ணா சாலையில் நடைபெறும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா-4 கார் பந்தயம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி,  ''வருகின்ற 31ம் தேதி மற்றும் 1 ஆம் தேதி சென்னையில் முதல்முறையாக நடக்கக்கூடிய எஃப்4 கார் பந்தயத்திற்கு ஆய்வுக் கூட்டத்தைத் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து அரசு உயர் அதிகாரிகளோடு நடத்தியதாக தெரிவித்தார் தெரிவித்தார்.
 
இந்த கார் பந்தயத்திற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் கிட்டத்தட்ட 8,000 பேர் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஆகஸ்ட் 31 ஆம் தேதியான சனிக்கிழமை காலை மட்டும் பொதுமக்கள் இலவசமாக கார் ரேஸை பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் எந்தவிதமான போக்குவரத்து இடையூறும் இல்லாமல் அனைத்து வசதிகளும் தரமாக செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயநிதி கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு.! நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய புகாரில் நடவடிக்கை..!