Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவ மாணவியை கொன்றவன் ஒரு சைக்கோ.. மனோதத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள்..!

Advertiesment
மருத்துவ மாணவியை கொன்றவன் ஒரு சைக்கோ.. மனோதத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள்..!

Mahendran

, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (12:50 IST)
கொல்கத்தா மருத்துவ மாணவியை கொலை செய்த சஞ்சய் ராய் ஒரு சைக்கோ என்று மனோதத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சஞ்சய் ராய் அடிக்கடி ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவன் என்றும் ஆபாச படத்தில் மூழ்கி அதற்கு அடிமையாகி மிருகத்தனமான இச்சைகள் இருந்துள்ளது என்றும் மனோதத்துவ பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் எந்த குற்றத்தை செய்தாலும் அது குறித்து கவலையோ குற்ற உணர்வு கொள்வதில்லை என்றும் சிபிஐக்கு மனோதத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சஞ்சய் ராயிடம் விசாரணை செய்தபோது தான் செய்த குற்றத்திற்கு அவர் எந்த விதத்திலும் வருந்தவில்லை என்றும், தான் செய்த கொலையில் உள்ள சில நுணுக்கமான தகவல்களை கூட தன்னிடம் மறக்காமல் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு பெண்ணை கொலை செய்த சம்பவம் குறித்து எந்த கவலையும் கொண்டதாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே சஞ்சய் ராய் கொலை செய்வதற்கு முன்பு ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று வந்ததாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் பொதுவெளியில் பாட கூடாது: தலிபான்களின் புதிய சட்டம்..!