Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் படம் எப்போது?... இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படம் எப்போது?... இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல்!

vinoth

, சனி, 24 ஆகஸ்ட் 2024 (07:33 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்துக்கு முன்பே இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா இயக்குனர்களும் சேர்ந்து ப்ரமோஷன் செய்தனர். நேற்று இரவுக் காட்சிகள் தமிழ்நாட்டின் பெருவாரியான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது.

தன் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தார் மாரி செல்வராஜ். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தனுஷோடு அவர் இணையும் படம் எப்போது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நான் இப்போது இயக்கும் பைசன் காளமாடன் படம் முடிந்ததும் தனுஷ் சாருடனான படம் தொடங்கும்” எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் ரஜினியை வைத்து படம் இயக்க அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் ரிலீஸான மூன்று படங்களுக்கும் பாசிட்டிவ்வான வரவேற்பு!