Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை உடனே அகற்றுக: விஜயகாந்த் வலியுறுத்தல்

Advertiesment
முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை உடனே அகற்றுக: விஜயகாந்த் வலியுறுத்தல்
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (17:11 IST)
முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்றுங்கள் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வலியுறுத்தி உள்ளார் 
 
இன்று சென்னை தலைமை செயலகம் அருகே மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கவிதா அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பராமரிப்பு இல்லாமல் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்
 
மேலும் குண்டும் குழியுமான சாலை உடனே செப்பனிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் முறிந்து விழுந்ததில் காவலர் கவிதா உடல் நசுங்கி உயர்ந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!