காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.15 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்கு பருவமழையாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மழைக்காரணமாக சென்னை தலைமை செயலகம் முகப்பில் உள்ள மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கவிதா என்ற பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் ஒரு போக்குவரத்து காவலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண்காவலர் கவிதா குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.15 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் மரம் விழுந்ததில் காயமடைந்த காவலர் முருகன், தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.