Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு.. தாமரையில் போட்டியிட மறுப்பா?

Siva
வியாழன், 21 மார்ச் 2024 (07:18 IST)
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில் அந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் தினகரன் போட்டியிடுவார் என்றும் இன்னொரு வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையின் போது தினகரன் கட்சியினர் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியதாகவும் ஆனால் தினகரன் கண்டிப்பாக முடியாது என்றும் தங்களுக்கு ஒரு என குக்கர் சின்னம் இருக்கிறது என்றும் அதில் தான் போட்டியிடுவேன் என்று உறுதிபட கூறியதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments