Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2026 -ல் நான் யாரென்று காட்டுவேன் -சசிகலா

2026 -ல்  நான் யாரென்று காட்டுவேன் -சசிகலா

Sinoj

, புதன், 20 மார்ச் 2024 (18:20 IST)
அதிமுக கட்சி தற்போது 3 ஆக பிரிந்துள்ள நிலையில், 2026 ல்  நான் யாரென்று காட்டுவேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் இணைந்து சசிகலாவையும் டிடிவி.தினகரனையும் கட்சியை விட்டு  நீக்கினர்.
 
அதன்பின்னர், டிடிவி. தினகரன் அமமுக என்ற தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.
 
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று விடுதலையான சசிகலா அதிமுக பிரிந்துள்ள  நிலையில், இதை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
 
சமீபத்தில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிப்பட்ட நிலையில், அவருக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
 
ஓபிஸ் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து தனியாக இயங்கி வந்த நிலையில்,தற்போது   ஓபிஎஸ் தினகரன் மற்றும் சசிகாலவுடன் இணைந்து  செயல்பட்டு வரும் நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில், வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலில் நான் யார் என்ரு காட்டுவேன். திமுக என்னாகும் என்பதைக் கணித்துள்ளேன். 3 அணிகளாக உள்ள அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்புள்ளது. வரும் 2026 ல் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி இருக்கும் என்று பட்டுக்கோட்டையில் சசிகலா பேட்டியளித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என கழகத்திற்கு தெரியும்.. சீட் கிடைக்காத திமுக எம்பியின் டுவிட்..!