Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லாம் நிலுவையிலுள்ள வழக்குகளுக்காகவா? டிடிவி. தினகரனை கிண்டலடித்த முன்னாள் எம்.பி.,

எல்லாம் நிலுவையிலுள்ள வழக்குகளுக்காகவா? டிடிவி. தினகரனை கிண்டலடித்த முன்னாள் எம்.பி.,

Sinoj

, புதன், 20 மார்ச் 2024 (17:29 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில்  நாடு முழுவதும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
நேற்று கெஜ்ஜல் நாய்க்கன் பட்டியில் நடந்த  நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பிரதமர் மோடி பங்கேற்றார்.
 
இதில்,  அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி. தினகரன், ஜி.கே.வாசன். ஏ.சி.சண்முகம் . தமிழருவி மணியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் கலந்துகொண்டனர்.
 
இந்த நிலையில், இன்று  பாஜக கூட்டணியில் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கையெழுத்தானது.
 
இதுகுறித்து தினகரன், நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது. தொகுதிகள் என என்பது பற்றி ஆலோசித்து அறிவிக்கப்படும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக அறிவிக்கும் என்று கூறினார்.
 
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான கூட்டணி உருவாகியுள்ள நிலையில்,   வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படது குறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:
webdunia
நான்கு சதவீத வாக்குகளை கொண்ட பாஜக கூட்டணியில் அதிமுக -வை மீட்டெடுப்பேன் என்று களமிறங்கி தனி கட்சி கண்ட தினகரனுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு.
 
R.K நகரில் திமுக மற்றும் அதிமுக-வை தோற்கடித்து வெற்றிகண்டு உயிருள்ளவரை பாஜகவோடு கூட்டணி சேரமாட்டேன் என்று முழங்கிய தினகரன் இரண்டு தொகுதிகளில் முடங்கியது ஏன்? எல்லாம் நிலுவையிலுள்ள வழக்குகளுக்காகவா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் நல்லவங்க.. கெட்டவங்கன்னு மக்களுக்கு தெரியும்..! – ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!