திமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக கூட்டணி ஒரு மாபெரும் கூட்டணியாக அமைத்துள்ள நிலையில் இந்த கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் புதிய நீதி கட்சிக்கு பாஜக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த ஒரு தொகுதியில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த தொகுதியில் போட்டியிட ஏசி சண்முகம் இன்னும் ஓரிரு நாளில் வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே வேலூர் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏசி சண்முகம் போட்டியிட்டார் என்பதும் இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் கதிர் ஆனந்த் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
கதிர் ஆனந்த் அவர்களுக்கு 4 லட்சத்து 87 ஆயிரம் வாக்குகளும் ஏசி சண்முகத்திற்கு 4 லட்சத்து 77 ஆயிரம் வாக்குகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியை கடந்த முறை இழந்த ஏசி சண்முகம் இந்த முறை வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.