Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழைய வீடியோக்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை! – காவல்துறை எச்சரிக்கை!

Advertiesment
பழைய வீடியோக்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை! – காவல்துறை எச்சரிக்கை!
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (11:18 IST)
மழை, வெள்ளம் தொடர்பான பழைய வீடியோக்களை தற்போது எடுத்ததாக பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்துள்ள நிலையில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அதுபோல பிற மாவட்டங்களில் ஆறுகள் உடைப்பு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலர் வேறு மாநிலங்கள் ஏற்பட்ட வெள்ளம் குறித்த வீடியோ மற்றும் பழைய வீடியோக்களை தற்போது நடந்தது போல எடுத்து பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எச்சரித்துள்ள காவல்துறை வேறு இடங்களில் எடுத்த மற்றும் பழைய வீடியோக்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய பெண் போலீஸ் – நேரில் வரவழைத்து பாராட்டிய முதல்வர்!