Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய பெண் போலீஸ் – நேரில் வரவழைத்து பாராட்டிய முதல்வர்!

மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய பெண் போலீஸ் – நேரில் வரவழைத்து பாராட்டிய முதல்வர்!
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (11:01 IST)
சென்னையில் மரம் விழுந்து மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

சென்னையில் கனமழை பெய்த நிலையில் டிபி சத்திரம் கிறிஸ்தவ கல்லறை ஒன்றில் மரம் சாய்ந்ததில் அங்கு தங்கியிருந்த நபர் காயமடைந்துள்ளார். அவர் மயக்கமடைந்து மரத்தின் அடியிலேயே கிடந்துள்ளார்.

மரத்தை அகற்றியபோது அவருக்கு மூச்சு இருப்பதை பார்த்த அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனே அந்த இளைஞரை தன் தோளில் தூக்கி ஓடினார். அங்கிருந்த ஆட்டோவை வர செய்து அதில் இளைஞரை வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவர் இளைஞரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை நேரில் பாராட்டி அவருக்கு சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் நலத்துக்கு நல்லது காஃபியா டீயா? மிகப் பழைய விவாதத்துக்கு புதிய தகவல்கள்!