Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்ருதாவிற்கு ஆறுதல் கூறினார் திருமாவளவன்

அம்ருதாவிற்கு ஆறுதல் கூறினார் திருமாவளவன்
, வியாழன், 4 அக்டோபர் 2018 (12:19 IST)
ஆணவக்கொலையால் உயிரிழந்த பிரணய்யின் மனைவி அம்ருதாவினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த  பிரனய் குமார்,அம்ருதா தம்பதியினர் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவர்களின் திருமனத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனைக்கு வெளியே பிரனயை, அம்ருதாவின் தந்தையால் அனுப்பப்பட்டகூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். இந்த சமபவத்தில் அம்ருதாவும் காயமடைந்தார்.

இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்தவரையும் அம்ருதாவின் தந்தையையும் காவல்துரை கைது செய்துள்ளது. சாதிய வெறிக்கு தன் கணவனைப் பலி கொடுத்துள்ள அம்ருதா சாதியத்திற்கு எதிராகப் போராடப் போவதாகவும் சாதியற்ற சமூகத்தில் தன் குழந்தையை வளர்க்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தன் கணவனுக்கு நீதி கேட்கும் வகையில் ’ஜஸ்டீஸ் ஃபாட் பிரணய்’ என்ற முகநூல் பக்கத்தையும் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆந்திராவுக்கு நேரில் சென்று அம்ருதாவையும் பிரணய்யின் பெற்றோரையும் சந்த்திது ஆறுதல் கூறினார். வி சி க சார்பில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கான் காசோலையும் கொடுத்திருக்கிறார். மேலும் ’ நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். உங்களுடன் இணைந்து பிரனய்யின் மரணத்திற்கு நீதிக் கிடைக்கும் வரை போராடுவோம்.’ எனக் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடுமலைப் பேட்டையில் இதே போல சாதி ஆணவக்கொலைக்கு தன் கணவனைப் பறிகொடுத்த கௌசல்யா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 செ.மீ மழை: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்