Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 செ.மீ மழை: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

Advertiesment
25 செ.மீ மழை: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
, வியாழன், 4 அக்டோபர் 2018 (11:46 IST)
தமிழகத்தில் வரும் அக்டோபர் 7-ந்தேதி மிக கன மழைப் பெய்யும் வாய்ப்பிருப்தாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் அதீதமான கனமழைப் பெய்து அதனால் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகும் போது அதைக் குறிக்க ரெட் அலர்ட் எனும் சொல் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை வரும் 7-ந்தேதி அன்று அதிகபட்சமாக 25 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இன்றிரவிலிருந்தே மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிது. குறிப்பாக கடலோர மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அதிக மழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த மாநில ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவும் அழைத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கார் படத்திற்கு ஃப்ரீ ப்ரோமோஷன் கிடையாது... முக்கிய பிரபலத்தின் பேச்சு