திருமாவளவன் எங்களை நெருங்கி வருகிறார் எனக் கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்
	
 
									
										
								
																	
	
எம்ஜிஆர் நூற்றாண்டு கடந்த ஓராண்டாக அதிமுக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவு விழா விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன் அதிமுக அரசு அழைத்தால் செல்வேன் எனக் கூரியிருந்தார்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதுகுறித்து பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ‘திருமாவளவன் கூறியிருப்பது அவர் எங்களை நெருங்கி வருகிறார் என்பதையே காட்டுகிறது. ஆனால் அரசு விழா என்பதால அரசு தரப்பில் முடிவெடுத்த பின்னரே யாரெல்லாம் அழைக்கப்படுவார்கள் என்ற விவரம் தெரியவரும்’ என்று பதிலளித்தார்.
 
									
										
			        							
								
																	தற்போது அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள திருமாவளவன் ‘எம்ஜிஆர் அனைவருக்கும் பொதுவானவர். ஒரு கட்சிக்கு மட்டுமே உரியவர் இல்லை. எளிய மக்களுக்கு உதவும் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். கிராம நிர்வாக அலுவளர் என்ற புதிய துறையை உருவாக்கி, எளிய மக்களும் அந்த பதவியில் அமரும் வண்ணம் ஆட்சி நடத்தியவர். அதனால்தான அரசு அழைத்தால் அந்த விழாவுக்கு செல்வேன் எனக் கூறியிருந்தேன்.’ என பதிலடிக் கொடுத்துள்ளார்.