Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கோடி கொள்ளையடித்து சாமிக்கு பங்கு..!? – வகையாய் சிக்கிய திருடர்கள்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (14:06 IST)
டெல்லியில் 1 கோடி ரூபாய் கொள்ளையடித்த நபர்கள் கோவிலுக்கு 1 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

டெல்லியில் கடந்த மார்ச் 3ம் தேதியன்று தொழிலதிபர் ஒருவரின் ஊழியர்கள் இருவர் அங்குள்ள சந்தினி சவுக்கில் உள்ள நகைக்கடையில் பணம் வசூல் செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே மற்றொரு வாகனத்தில் வந்து வழிமறித்த இரு ஆசாமிகள் துப்பாக்கி முனையில் அவர்களிடமிருந்த பணத்தை பறித்து சென்றனர்.

திருடப்பட்ட பணம் ரூ.1.1 கோடி குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீஸார் திருடர்களை பிடித்துள்ளனர். விசாரணையில் திருடர்களில் ஒருவர் நகைக்கடையில் முன்பு பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் திருடர்கள் திருடிய பிறகு அதிலிருந்து ரூ.1 லட்சத்தை எடுத்து கோவில் ஒன்றிற்கு காணிக்கையாக வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments