Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக வெற்றிக்காக நாக்கை அறுத்த பெண்..வேதனை தெரிவித்த மு.க. ஸ்டாலின்

Advertiesment
திமுக வெற்றிக்காக நாக்கை அறுத்த பெண்..வேதனை தெரிவித்த மு.க. ஸ்டாலின்
, செவ்வாய், 4 மே 2021 (17:23 IST)
திமுக வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தனது நாக்கை அறுத்துக்கொண்ட பெண்ணிற்காக ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில் போட்யிட்டு 3 ஆம் முறை  வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் நாளை மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்தித்து ஆட்சிமை அமைக்க உரிமைகோருகிறார் ஸ்டாலின்.

மேலும், தங்கள் எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சிமை அமைக்க ஸ்டாலின் உரிமை கோருகிறார்.

இந்நிலையில் திமுக வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தனது நாக்கை அறுத்துக்கொண்ட பெண்ணிற்காக ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகுதியில் வசித்துவருபவர் வனிதா(32). இவரது கணவர் பெயர் கார்த்திக். இந்நிலையில் இவர் தமிழ சட்ட மன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை கோயில் உண்டியலில் போடுவதாக வேண்டிக் கொண்டுள்ளார்.

தற்போது திமுக வென்று, மு.க.ஸ்டாலின் ஆகவுள்ளதால், வனிதா தனது வேண்டுதலுக்காக  பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசல் முன்பு தன் நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகுதியில் வசித்துவருபவர் கார்த்திக்  என்பவருடைய மனைவி வனிதா(32). திமுக வெற்றீ பெறால் அநகை அறுத்துக் காணிக்கை போடுவதாக வேண்டிக்கொண்டு அதை நிறைவேற்றியுள்ளார். இதை செய்தித்தாளில் படித்து நடுக்கமுற்றேன். திமுக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. நம் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்