Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் அரசு வேலை

குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் அரசு வேலை
, சனி, 2 மார்ச் 2019 (11:56 IST)
தேனி: குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்துள்ளது. 


 
தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவர் 4வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சாந்திலட்சுமி (வயது 48). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தேன்மொழி (27). கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வை சாந்திலட்சுமியும், தேன்மொழியும் ஒரே நேரத்தில் எழுதினார்கள். இதில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். 
 
இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் தற்போது அரசு வேலை கிடைத்து உள்ளது.
 
இதுகுறித்து சாந்திலட்சுமியிடம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘எனது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நான் 2012-ம் ஆண்டில் இருந்தே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்று வந்தேன். எனது மகள் தேன்மொழி தேர்வு எழுதினார். இருவருமே தேர்ச்சி பெற்றோம்.
 
  
நேர்முகத் தேர்வுக்கு பிறகு தற்போது எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்து உள்ளது. எனக்கு பொது சுகாதாரத்துறையிலும் (மருந்தகம்), என் மகளுக்கு இந்துசமய அறநிலையத்துறையிலும் இளநிலை உதவியாளர் (தட்டச்சர்) பணி கிடைத்து உள்ளது என்றார்-

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெற்கு ரயில்வேயில் 1765 இடங்களுக்கு 1600 வட இந்தியர்கள் தேர்வு