Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 பணம் அனுப்பிய முதியவர்...

Advertiesment
புல்வாமாவில் பலியான வீரர்களின்  குடும்பத்துக்கு ரூ.1000 பணம் அனுப்பிய முதியவர்...
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (18:13 IST)
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஒரு முதியவ்ர் ரூ. 1000 பண உதவி அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
லஷ்மிபுரம் அருகே உள்ள சரசுப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையன் (75) . இவரது மனைவி கமலாட்சியும் அருகே உள்ள பகுதியில் இந்த வயதான காலத்திலும் கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்து பிழைப்பு நடத்தி வந்தனர். 
 
இந்நிலையில் வானொலியில் காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களைப் பற்றி தகவல் அறிந்ததும் கவலை அடைந்து. தூங்க முடியாமல் தவித்துள்ளார். எனவே குருவி சேர்ப்பது போல் சேர்த்து வந்த பணம் ரூபாய் 1000 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலம் வந்த பொன்னையன் ரூ.100 நிதியை கலெக்டர் மரியம் பல்லவியிடம் வழங்கினார். இந்த நிதி உதவி செய்தமைக்காக  அவரை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புல்வாமா எதிரொலி: பாக்கிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை!