Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேனி தொகுதியில் களம் இறங்க தயாராகும் ஓபிஎஸ் மகன்?

Advertiesment
தேனி தொகுதியில் களம் இறங்க தயாராகும் ஓபிஎஸ் மகன்?
, செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (10:34 IST)
தேனி நாடாளுமன்ற தொகுதியில்  அதிமுக சார்ப்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்ரநாத் குமார் களம் இறங்க தயாராகி வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது.
 
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட  தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
 
ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வினியோகத்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் நேற்று தொடங்கி வைத்தனர்.
 
 இந்நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத் குமார், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, முக்கூர் சுப்பிரமணியம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், வட சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்பமனுக்களை வாங்கி சென்றனர்.
 
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார்,  தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கடந்த முறையே ரவீந்திராத் போட்டியிட முயற்சி செய்யதாக கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்கள் அது நடக்கவில்லை. . 
 
 
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து கடந்த சில ஆண்டுகளாக ரவீந்திரநாத்,  தேனி மாவட்டம் முழுவதும் தீவிரமாக வேலை செய்து வருகிறார். எனவே இந்த முறை பார்த்திபனுக்கு பதில் ரவீந்திரநாத் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 
 
ப.ரவீந்திரநாத் தற்போது தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கிறார். நேற்று விருப்ப மனு வாங்கி  சென்றதை அடுத்து தேனி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை: ராகுலுக்கு பதிலடி கொடுத்த நிதின்கட்காரி