Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா! – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Advertiesment
தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா! – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
, புதன், 30 மார்ச் 2022 (11:21 IST)
பிரபலமான தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று திரளான பக்தர்களுடன் நடைபெற்றது.

தஞ்சாவூரின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நாள் தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று, வரும் ஏப்ரல் 13ந் தேதி காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் தியாகராஜர், ஸ்கந்தர், கமலாம்பாள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் அதேநாளில் காலை 7.30 மணிக்குள் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவு பணி செய்யும் டிராபிக் காவலர்களுக்கு விடுமுறை! – போக்குவரத்து காவல் அறிவிப்பு!