தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இன்று இரவு டெல்லி செல்கிறார்!
3 நாள் பயணமாக இன்று இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்துவைப்பதோடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் தமிழகத்தின் நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக மனு அளிக்கிறார்.