Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிரிக்கு வந்தது தண்ணீர் – ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் ஆரம்பம்

Advertiesment
காவிரிக்கு வந்தது தண்ணீர் – ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் ஆரம்பம்
, புதன், 17 ஜூலை 2019 (13:38 IST)
நீண்ட நாட்கள் கழித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது கர்நாடகா. தண்ணீர் திறப்பால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வருடம் ஆடிப்பெருக்கை கொண்டாட மகிழ்ச்சியோடு தயாராகி வருகிறார்கள் தமிழக மக்கள்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. காவிரி ஆணையம் ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்னீரை திறந்துவிட சொல்லியும் கர்நாடக அரசு காலம் தாமதித்து வந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் நல்ல மழை பெய்திருப்பதால் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது.

இன்றைய நிலவரப்படி கபினி அணையிலிருந்து மணிக்கு 500 கன அடி தண்ணீரும், கே.எஸ்.ஆர் அணையிலிருந்து 355 கன அடி தண்ணீரும் காவிரிக்கு வந்து கொண்டிருக்கின்றன. போன வருடம் ஆடிப்பெருக்கின் போது பல ஆறுகளில் தண்ணீரே இல்லாத நிலை. பள்ளங்களில் சேர்ந்து கிடந்த நீரை கொண்டு மக்கள் பேருக்கு வழிபாடு செய்துகொண்டார்கள். ஆனால் தற்போது நல்ல மழையும், காவிரி தண்ணீரும் தமிழக மக்களுக்காக வந்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்த வருட ஆடிப்பெருக்கு போன வருடத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகோ எம்.பி.யாக அடுத்த எதிர்ப்பு – குடியரசுத் துணை தலைவருக்கு சுப்ரமண்ய சாமி கடிதம் !