மத்திய பிரதேசம் மாநிலத்தில் காவல் அதிகாரியாக வேடமிட்டி மக்களிடம் பணம் பறித்துவந்துள்ள பெண்ணுக்கு, ஒரு பெண் போலீஸின் கணவரே போலிஸ் சீருடைகளை திருடிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக ஒருவர் பணியாற்றி வந்தார். இவரது கணவருக்கு அங்குள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
அந்தப் பெண்ணோ அப்பகுதியில் உள்ளா மார்ட்கெட் , கடைகளில் எல்லாம் சென்று தான் ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்று கூறி பலநாட்களாக மாமூல் வசூலித்துவந்துள்ளார். பின்னர் அவரது தொந்தரவு பற்றி மக்கள், வியாபாரிகள் காவல்துறைக்கு தகவல் தெருவித்தனர்.
இதனையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் போலீஸ் வேடமிட்ட பெண் சிக்கினார்.
இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், குறிப்பிட்ட ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் உடைதான் இது என்றும், இந்த உடைய தன்னோடு தொடர்பு வைத்துள்ள அவரது கணவர்தான் திருடிக்கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அந்த பெண் மற்றும் பெண் போலீஸின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.