மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்பி ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமண்யசாமி குடியரசுத்தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10ஆயிரம் தண்டனையும் மதிமுக விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தன் மீதான வழக்குக்கு எதிராக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஆனாலும் அவர் எம்.பி ஆவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார். இதையடுத்து இப்போது பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சாமியும் குடியரசுத் துணைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ‘வைகோ, இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை இழிவு செய்துள்ளார். சமஸ்கிருத சொல்லகராதிதான் இந்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால் இந்தி படிக்கிறது பயனற்றது எனக் கூறி அரசியல் சாசனத்தை மீறியுள்ளார்’ எனக் கூறியுள்ளார்.