Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

39 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்!

Advertiesment
39 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்!

J.Durai

, செவ்வாய், 16 ஜூலை 2024 (12:56 IST)
மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்  ஆகியோர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக, 39 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
 
பத்தாண்டுகள் விபத்தின்று பேருந்து இயக்கிய 10 ஓட்டுனர்களுக்கு 100 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,  மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் (மதுரை மண்டலம்) ஆ.ஆறுமுகம் ,  மாநகராட்சி மண்டலத் தலைவர்  வாசுகி சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 நாட்களுக்கு முக்கிய ரயில்கள் ரத்து! தென்னக ரயில்வே அறிவிப்பு..!