Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைதாகி மண்டபத்தில் இருந்த நிலையிலும் திருமணம் செய்து வைத்த ஸ்டாலின்

Advertiesment
கைதாகி மண்டபத்தில் இருந்த நிலையிலும் திருமணம் செய்து வைத்த ஸ்டாலின்
, வியாழன், 5 ஏப்ரல் 2018 (13:19 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக திமுக தினந்தோறும் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பந்த் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணாசாலையில் சாலைமறியல் செய்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். பின்னர் அவரையும் திமுக தொண்டர்களையும் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஸ்டாலின் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் ஏற்கனவே திருமணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் மணமக்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த மண்டபத்தில் நடந்த திருமணத்தை ஸ்டாலின் நடத்தி வைத்தார். கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்ட நிலையிலும் ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபாச வீடியோக்களில் திருமண புகைப்படங்கள் : போட்டோ ஸ்டுடியோ செய்த அதிர்ச்சி வேலை