Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச வீடியோக்களில் திருமண புகைப்படங்கள் : போட்டோ ஸ்டுடியோ செய்த அதிர்ச்சி வேலை

Advertiesment
ஆபாச வீடியோக்களில் திருமண புகைப்படங்கள் : போட்டோ ஸ்டுடியோ செய்த அதிர்ச்சி வேலை
, வியாழன், 5 ஏப்ரல் 2018 (13:07 IST)
ஒரு போட்டோ ஸ்டுடியோ நிறுவனம், திருமண புகைப்படங்களை ஆபாச வீடியோவில் இணைத்து தங்களின் ஆபாச இணையதளத்தில் பதிவு செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருமண விழாக்களில் மணமக்களை அழகாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆல்பம் போடும் பழக்கம் தற்போது  அதிகரித்துள்ளது. குறிப்பாக, திருமணத்திற்கு முன்பே மணமக்களை போட்டோஷூட் நடத்தி ஆல்பங்கள் தயாரிக்கும் பணியை சில நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன.
 
கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் ‘சத்யம் சூட் அண்ட் எடிட்’ என்கிற ஸ்டூடியோ பல வருடங்களாக திருமணம் உள்ளிட்ட விழாக்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து கொடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளது.
 
அந்நிலையில் ஒரு ஆபாச வீடியோவில் தங்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்ட ஒரு தம்பதி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
போலீசாரின் விசாரணையில், திருமண விழாக்களில் எடுக்கப்படும் தம்பதிகளின் புகைப்படங்களை தாங்கள் நடத்தி வரும் ஆபாச இணையதளத்தில் பதிவு செய்வதை, அந்த ஸ்டுடியோவை நடத்தி வரும் நபர் செய்து வருவதும், கடந்த 5 வருடங்களாக இந்த செயலை அவர் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அதோடு, குழந்தைகளின் புகைப்படங்களை கூட அவர்கள் அந்த ஆபாச இணையதளத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
 
இந்த புகாரில் 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஸ்டுடியோவை நடத்தி வரும் பீபீஷ் என்ற நபர் தலைமறைவாகி உள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், இந்த ஸ்டுடியோ மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த தம்பதிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி ஒருவராக பேருந்தை நிறுத்தி போராட்டம் செய்த திமுக பெண் தொண்டர்