Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்ஆர்எம் கல்லூரியில் 3 தற்கொலைகள்: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (19:05 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் அவ்வப்போது தற்கொலைகள் நிகழ்ந்து வருவது குறித்து பத்திரிகைகளில் செய்து வந்தன. ஆனால் இந்த தற்கொலைகள் குறித்து போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்
 
இந்த நிலையில் சென்னை காவல் துறை இயக்குனரகம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் தங்கி பயின்று வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி அனுப்பிரியா என்ற மாணவி கடந்த மே 25ஆம் தேதி அன்று பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் ஜார்கண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் சவுத்ரி என்ற 19 வயது கல்லூரி மாணவர் கடந்த் மே27ஆம் தேதி விடுதியின் பின்புறம் இறந்து கிடந்தார். மேலும் ஜூலை 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தர்ஷன் என்பவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இந்த மூன்று நபர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள குற்றவியல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அதாவது சிபிசிஐடிக்கு மாற்ற காவல்துறை தலைமை இயக்குநர் திரு திரிபாதி ஐபிஎஸ் அவர்களை அவர்கள் உத்தரவிட்டுள்ளார் 
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments