Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் மாவட்ட ஆட்சியரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்பாட்டம்.

Advertiesment
karur
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (22:27 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை தகாத வார்த்தைகளை கூறி வெளியேற்றியதால் பரபரப்பு – விரைவில் மாவட்ட ஆட்சியரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்பாட்டம்.
 
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜெகதாபி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவில்லை என்று பலமுறை கூறியதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டு வரும் பெண்களை ஒன்று திரட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி மாவட்ட இணை செயலாளர் கோமதி மற்றும் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அ.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் மனுக்களாக கொடுத்த போது, கட்சி நிர்வாகிகள் என்றும் பாராமல், புரோக்கர்கள் ஏன் உள்ளே வருகின்றீர்கள் என்று அநாகரீகமான வார்த்தைகளை கொண்டு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கூறியுள்ளார். இதனையடுத்து வெளியே வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழரின் ஆணைக்கிணங்க, அவரின் அனுமதி பெற்று தொடர்ந்து பெரியவர்கள் முதல் அனைத்து சமுதாய மக்களையும், கட்சி பிரமுகர்களையும் இழிவு படுத்தி வரும் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றதோடு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, குளித்தலை அடுத்துள்ள நங்கவரம் பகுதியில் முதுபெரும் விவசாயியும், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியுமான ஒருவரை வெளியே போயா ? என்று கூறியது பெரும் வைரலானதையடுத்து கரூர் மாவட்ட அளவில் திமுக கட்சியிலும், திமுக கூட்டணியிலும் பெரும் உச்சகட்டம் குழப்பம் இவரால் வெளியாகும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
அ.சந்திரசேகர் - மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி – கரூர் மாவட்டம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்க பாடம் புகட்ட ஈரோடு இடைத்தேர்தலில் களம் காணுவோம்- முகிலன்