Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரியில் செம மழை; இந்த மாதமும் அனுமதி இல்லை! – பக்தர்கள் ஏமாற்றம்!

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (15:36 IST)
தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருவதால் இந்த மாதமும் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இந்த மாதம் கார்த்திகை அமாவாசை, சிவராத்திரி வருவதால் நவம்பர் 21 (நாளை) முதல் 24ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை மற்றும் ஆற்று பகுதிகள், ஊற்றுகளில் தண்ணீர் பெருக்கு அதிகரித்து வருவது ஆகியவற்றின் காரணமாக நாளை முதல் 24ம் தேதி வரை பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments