Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்கவுண்ட்டர் ப்ளான்? நீதிமன்றத்தில் ஆஜரான ரவுடி படப்பை குணா!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (12:23 IST)
தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் ரவுடி படப்பை குணா. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மிரட்டி பணம் வசூலித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் போலீஸார் படப்பை குணாவை தீவிரமாக தேடி வந்தனர். தலைமறைவான பட்டப்பை குணாவை போலீஸார் எண்கவுண்ட்டர் செய்ய திட்டமிடுவதாக சமீபத்தில் படப்பை குணாவின் மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த நிலையில் தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் படப்பை குணா ஆஜராகியுள்ளார். நீதிமன்றத்தில் சரண் அடைந்ததால் அவர் சட்டப்படி நடத்தப்படுவார் என காவல்துறை உறுதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி.! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமனம்..!!

மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு..! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும்: சுப்பிரமணியன் சுவாமி

மோடி பதவியேற்கும் நேரத்தில் விளக்குகளை அணைத்து இருளில் இருந்த மம்தா பானர்ஜி..!

அடுத்த கட்டுரையில்
Show comments